அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு (Pamban Swamigal History).

raj 42 22/2/2023
 அருள்மிகு பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு (Pamban Swamigal History).

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் (PambanGurudasaSwamigalஅண். 1848-50 - மே 30, 1929) தமிழ்நாட்டில் இராமேசுவரம் என்ற ஊரில் பிறந்து வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ்த்துறவி ஆவார்.பழந்தமிழ்க் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாகத் தோராயமாக 1848-50ஆம் ஆண்டு இராமேசுவரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866-ஆம் ஆண்டு உள்ளூர் கிருத்துவப் பள்ளியில் பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.

 

சிறு வயதிலேயேதமிழ் மொழியில்மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்த சுவாமிகள்,தெய்வத் திருமுருகன் பால் அளவிடற்கரிய பக்தி கொண்டவர்.கனவிலும் நனவிலும்ஆறுமுகப் பெருமானையே தரிசித்தவர். நாள்தோறும் கந்த சஷ்டிக்கவசத்தை பாராயணம் செய்துஇறைவழிபாடு செய்தசுவாமிகள் மனதில்,தாமும் அதுபோல்,ஆறுமுகக்கடவுள் மீதுதமிழ்ப்பாடல்கள் என்றஎண்ணம் ஏற்பட்டது.தினமும் உணவுஉண்பதற்கு முன்ஒரு பாடல்என்ற முறையில்நூறு பாடல்களைஇயற்றினார். அப்போதுசுவாமிகளுக்கு அகவை12 அல்லது 13 இருக்கலாம். மிகச்சிறு வயதிலேயேமுருகக்கடவுள் மீதுஅளவு கடந்தபக்தி கொண்டுபாடல் இயற்றும்சிறுவன் அப்பாவுவின் திறமையைப் புரிந்துகொண்ட, சுவாமிகளின் குடும்ப நண்பர்சேதுமாதவ ஐயர்,விஜய தசமிநன்னாளில் இராமேஸ்வரத்தில் உள்ளஅக்னி தீர்த்தத்தில் புனித நீராடவைத்து, சுப்ரமணியக் கடவுளின் சடச்சரமந்திரத்தை குருஉபதேசம் செய்து வைத்தார்.

 

இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிள்ளைச் செல்வங்களைப் பெற்றாலும், இறைபக்தி மேலீட்டால் பாம்பன் சுவாமிகள் ஒரு துறவி போலவே தன் வாழ்க்கையை நடத்தி வந்தார்.

ஒருமுறை, துறவறம் மேற்கொண்டு, பழனிக்குச் சென்றுப் பழனி ஆண்வரைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் சுவாமிகள் மனதில் உதித்தது. தனது உள்ளக்கிடக்கையை தனது உற்ற நண்பர் அங்கமுத்து பிள்ளையிடம் கூறினார். அங்க முத்து பிள்ளையோ, சுவாமிகளின் குடும்ப வாழ்க்கையையும், அவருடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டும், தற்சமயம் வேண்டாம் என்று சுவாமிகளைத் தடுத்தார். சுவாமிகள் மீண்டும் கூற, ” இது பழனி முருகக் கடவுளின் ஆணையா?” என்ற கேள்வி எழுப்பினார். சுவாமிகளோ ஆம் என்பதற்கிணங்க தன் தலை அசைத்து பதில் கூறினார்.

 

துறவறம் இருக்க பழநிக்கு முருகப்பெருமான் வரச் சொன்னதாக தனது நண்பரிடம் பொய்யுரைத்தார் ஸ்வாமிகள். உடனே அவரது கனவில் காட்சி தந்த முருகப்பெருமான், பொய்யுரைக்குத் தண்டனையாக 'தாம் கட்டளையிடும் வரை பழநிக்கு வரவே கூடாது' என்று தடை விதித்தார்.இதானால் சுவாமிகளும் பழனிக்குச் செல்ல முடியாமல் போயிற்று. தாம் இயற்றிய பழனிமலைப் பதிகத்தில், ” என்று என்னைப் பழனிக்கு அழைப்பாயோஎன்று பொருள்படும்படி பத்து பாடல்களை இயற்றியுள்ளார். பாம்பன் சுவாமிகள் வாழ்க்கையில் இறைவன் முருகன் நடத்திய திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று.

இதற்கிடையில் சுவாமிகளின் தந்தையார் சாத்தப்பபிள்ளை சிவபதம் அடைந்தார். இதனால் குடும்பப் பொறுப்புகளை சுவாமிகளே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தக்க வயதில் தன் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்து, ஒரு பொறுப்புள்ள தந்தையாக கடமை ஆற்றினார்.

  ‘சண்முகக் கவசம்’, ‘பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம்போன்ற பாடல்களை இயற்றினார்.. 1894-ம் ஆண்டு ராமநாதபுரம் அருகிலுள்ள பிரப்பன்வலசை என்ற இடத்தில்  அமர்ந்து 35 நாள்கள் கடும் தவமிருந்து முருகப்பெருமானின் அருட்காட்சியைக் கண்டார். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமி. அன்றிலிருந்து பௌர்ணமி வழிபாட்டைத் தொடங்கினார். துறவறம் மேற்கொண்டு சொந்தங்களையும் சுகங்களையும் இழந்தார். அருணகிரிநாதரைப்போல தலம்தோறும் சுற்றி, பாடத் தொடங்கினார்

 

6,666 பாடல்களையும், 32 வியாசங்களையும் எழுதி முருகப்பெருமானைக் கொண்டாடினார்.தமிழகம்மட்டுமின்றி பெஜவாடா,கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம்,கல்கத்தா, கயா...என்று காசி வரை திருத்தலயாத்திரை மேற்கொண்டார். 1918-ம் ஆண்டு ஸ்வாமிகள்வெப்பு நோயால்பாதிக்கப்பட்டார். அப்போது`குமாரஸ்தவம்எனும் ஆறெழுத்து மந்திரநூலை இயற்றினார்.அந்தப் பாடலால்பூரண குணம் பெற்றார். “ 'ஓம் ஷண்முக பதயே நமோ நம:'எனத் தொடங்கும்இந்த மந்திரப்பாடல்களைப் பாடுவோர்,சண்முகப் பெருமான்இரு தேவியர்களோடு மயில் மீது அமர்ந்தகாட்சியை தரிசிப்பார்கள்என ஸ்வாமிகள் தமது சீடர்களுக்கு உபதேசித்தார்


முருகப்பெருமானை நாடிச் சென்ற இடமெல்லாம் மனமுருகிப் பாடினார். இவரது தமிழால் மயங்கிய முருகப்பெருமான் பலமுறை நேரிலும் கனவிலும் காட்சி தந்து, பல அருள்விளையாட்டுகளை நடத்தினார். வயதான காரணத்தால் ஸ்வாமிகள் சென்னையிலேயே தங்கியிருந்தார். 1923-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சென்னை தம்புசெட்டிதெருவில் நடந்து சென்ற ஸ்வாமிகளின் மீது குதிரை வண்டிச் சக்கரம் இடித்து கால் எலும்பு முறிந்து போனது. சென்னை சென்ட்ரல் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஸ்வாமிகள். ‘குணப்படுத்துவதுகஷ்டம்என்று மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். ஆனால், முருகப்பெருமான் கைவிடவில்லை. தினமும் பாடிய `சண்முகக் கவசம்அவரைக் காத்தது. 1924, ஜனவரி 6-ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் தோன்றிய சண்முகக் கடவுள் ‘15 நாளில் குணப்படுத்துவேன்என்று வாய் மலர்ந்தார்


அவ்வாறே ஸ்வாமிகளின் கால் எலும்புகளைச் சேர்த்து குணப்படுத்தினார். முருகன் காட்சியளித்த அந்த நாள் இன்றும்மயூர வாகன சேவன விழாஎன மார்கழி மாத வளர்பிறை பிரதமை நாளில் கொண்டாடப்படுகிறது.ஸ்வாமிகள் உருவாக்கிய மகா தேஜோ மண்டல சபையினர் இந்த விழாவை நடத்துகிறார்கள். அப்போது பாம்பன் ஸ்வாமிகள் இயற்றியஅசோக சாலவாசம்என்ற பாடல்களை வாசிப்பார்கள். இன்றும் சென்னை பொது மருத்துவமனையின் (ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை) மன்றோ வார்டில் பாம்பன் ஸ்வாமிகளின் திருவுருவப்படம் வைக்கப்பட்டிருக்கிறது


பூரண குணமடைந்த பாம்பன் ஸ்வாமிகள் 1926-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நாள்மகா தேஜோ மண்டல சபை அமைப்புஎன்ற வழிபாட்டு அமைப்பை ஏற்படுத்தினார். தமது இறுதிக்காலம் நெருங்குவதை ஸ்வாமிகள் அறிந்துகொண்டார். படிப்போரும் கேட்போரும் பரவசம்கொள்ளும் 'குமாரஸ்தவம்' பாடியபடியே இருந்தார்கந்தபெருமானை அடையும் காலம் வந்ததை ஸ்வாமிகள் உணர்ந்தார். உணவை மறுத்தார். சதா சர்வ நேரமும் முருகப்பெருமானைத் துதித்தபடியே இருந்தார். 1929-ம் ஆண்டு மே 30-ம் தேதி காலை 7:15 மணியளவில் பாம்பன் ஸ்வாமிகள் மகா சமாதியடைந்தார்.அவரது சீடர்களும் பக்தர்களும் கலங்கிப் போனார்கள். ஆனால், அவரது உபதேசப்படி முருகப்பெருமானின் பாடல்களைப் பாடியபடியே ஸ்வாமிகளின் இறுதி யாத்திரை முறைகளைச் செய்தார்கள். அடுத்த நாள் 1929-ம் ஆண்டு மே 31 அன்று அலங்கரிக்கப்பட்ட புஷ்ப விமானத்தில் பாம்பன் ஸ்வாமிகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டார். அவர் விதித்தபடி வங்கக் கடலோரம் சென்னை, திருவான்மியூரில் ஸ்வாமிகளின் திருவுடல் அடக்கம் செய்யப்பட்டு,மகா சமாதி அமைக்கப்பட்டது.

இன்றும் பல ஆயிரம் மக்கள் கூடி வழிபடும் இடமாக ஸ்வாமிகளின் சமாதி ஆலயம் விளங்கிவருகிறது.இங்கு பௌர்ணமி வழிபாடு மிக மிக விசேஷமானது. `இங்கு வந்து முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களை பாம்பன் ஸ்வாமிகள் கைவிடுவதே இல்லைஎன பக்தர்கள் மெய்சிலிர்க்கக் கூறுகிறார்கள். எளிய மக்கள் 'தாத்தா கோயில்' என்றே இந்த ஆலயத்தைக் குறிப்பிட்டு வணங்கி வருகிறார்கள்.திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலிருக்கும் ஸ்வாமிகளின் சமாதியைத் தரிசித்து, பாம்பன் ஸ்வாமிகளின் அருளுடன் ஆறுமுகனின் அருளும் சேர்த்து பெற்றுச் சிறப்புற வாழலாமே..!